ஹீமோகுளோபின் பிரச்சனையா.? தலை சுற்றல், உடல் பலவீனமாக இருக்கிறதா.!? இதை மட்டும் பயன்படுத்துங்கள்….!!

ஹீமோகுளோபின் பிரச்சனை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது ஏற்படுகின்ற பிரச்சனையாக உள்ளது.

இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இந்த ஹீமோகுளோபின் பிரச்சனை ஏற்படுகிறது.

இதற்கு இலகுவான தீர்வு வீட்டிலேயே இருக்கிறது.வாங்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.!

வீட்டில் பேரீச்சை பழம் இருந்தால் அரை டம்ளர் நீரில் விதை நீக்கிய ஒரு பேரீச்சை பழத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துவிடுங்கள். காலை எழுந்ததும் அதனை சாப்பிட்டு அந்த நீரையும் குடித்து விடுங்கள். இப்படி சாப்பிட்டுவிட்டு இரத்த பரிசோதனை செய்து பாருங்கள்.

ஹீமோகுளோபின் அளவு கூடி இருக்கும்.! அடுத்து நெல்லிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் சிறு சிறு துளையிட்டு இரவில் தேனில் ஊற வையுங்கள். காலையில் எழுந்து நெல்லிக்காயை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

ஹீமோகுளோபின் அளவு கூடிவிடும். அடுத்து காய்ந்த திராட்சைகள். அரை டம்ளர் நீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 8 காய்ந்த திராட்சைகளை ஊற வைத்துவிடுங்கள். காலையில் அதனை சாப்பிட்டு அரை டம்ளர் நீரையும் குடித்துவிடுங்கள். 9நாளில் 72 காய்ந்த திராட்சைகளை சாப்பிட்டு அதன் நீரை நீங்கள் குடிக்க வேண்டும். இதுவும் மிக இலகுவான மருத்துவ முறை தான்.

“ஆரொக்கியம் உள்ள இடத்தில் நம்பிக்கை பிறக்கும், நம்பிக்கை இருந்தால் வாழ்வில் அனைத்தும் கிடைக்கும்”

Leave a comment